வெளிநாட்டு ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கும் பொருளாதார ஆய்வாளர் இதயச்சந்திரன் அவர்கள் வர்த்தக வங்கிகளில் இருக்கும் வெளிநாட்டு நாணயங்களை மத்திய வங்கிக்கு விற்க வேண்டும். நாங்கள் அதை வாங்கி அதற்கு சமமான இப்போது இருக்கும் நாணய மாற்று வீதத்தின் படி அதற்குரிய ரூபாவை நாங்கள் திருப்பி உங்களுக்கு தருவோம் என்கிற செய்தி பரவலாக பேசப்பட்டது.
ஆனால் அது ஒரு சிக்கலை உருவாக்கி விடும் வெளிநாட்டில் இருந்து தங்களது உழைப்பை அனுப்பும் மக்கள் அந்த பணத்தை அனுப்பாமல் அந்தநாட்டு வங்கிகளிலே அந்த பணத்தை முதலீடு செய்யக்கூடிய ஒரு ஆபத்தான நிலையை உருவாக்கி இருக்கும் ஆகவேதான் இலங்கை மத்திய வங்கி அதை செய்ய விரும்ப வில்லையென என அரசியல் மற்றும் பொருளாதார ஆய்வாளர் இதயச்சந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கையில் தற்போது நடந்த தமிழ் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தை மற்றும் அனைத்து கட்சி கூட்டங்களை பார்க்கும் போது வடக்கு கிழக்கு அபிவிருத்தி நிதியம் என்ற விடயத்தை உருவாக்குகிறார்கள்.
அதாவது அவர்களை பொருத்தவரை இந்த வங்குரோத்து நிலைக்குச் செல்லாமல் இருப்பதற்கு சீனாவிடம் இருந்து 1 பில்லியன் கடன், 1.5 பில்லியன் ரூபாக்கான கிரேடிட் லைன் என்ற கொடுக்கல் வாங்கல் விடயங்கள் மற்றும் இந்தியாவிடம் இருந்து 500 பில்லியன் கடன் என இலங்கை அரசாங்கம் பெற்று வருகிறது.
இதனை பார்க்கும் போது வங்குரோத்து நிலையை நாடு அடையாமல் இருப்பதற்கான ஓர் நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறார்கள் அவர்களுடைய எதிர்பாப்பு என்னவென்றால் இந்த கோடை கால விடுமுறை ஆரம்பமாகிவிட்டது.
இனி உல்லாச பயணத்துறை வளர்ச்சியடையும், கோவிட்டின் பாதிப்பும் குறைவு ஆகவே தங்களுடைய பொருளாதாரம் மேலெழும்பக்கூடிய அதாவது வெளிநாட்டு நாணய கையிறுப்பு கொஞ்சம் அதிகரிக்ககூடிய வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. பிறகு ஏன் நாம் சர்வதேச நாணய நிதியத்திடம் செல்ல வேண்டும் என்ற அடிப்படை சிந்தனையாக கூட இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.