இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் அடிப்படையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் விற்பனை விலை 394 ரூபாவாகவும் கொள்முதல் விலை 379 ரூபாவாகவும் உள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 299 ரூபாவாகவும், கொள்வனவு விலை 288 ரூபாவாகவும் உள்ளது. யூரோ ஒன்றின் விற்பனை விலை 337 ரூபாவாகவும் கொள்முதல் விலை 325 ரூபாவாகவும் உள்ளது.
சுவிஸ் பிராங் ஒன்றின் விற்பனை விலை 325 ரூபாவாகவும் கொள்முதல் விலை 313 ரூபாவாகவும் உள்ளது. கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 240 ரூபாவாகும், கொள்வனவு விலை 230 ரூபாவாகும். தனியார் வங்கிகளில் ஒரு குவைத் தினார் 1001.70. ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதேவேளை, ஏனைய மத்திய கிழக்கு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.
பஹ்ரைன் தினார் ஒன்றின் பெறுமதி 797.33 ரூபாவாகும்.
ஓமான் ரியால் ஒன்றின் பெறுமதி 785.59 ரூபாவாகும்.
கட்டார் ரியால் ஒன்றின் பெறுமதி 83.98 ரூபாவாகும்.
சவுதி ரியால் ஒன்றின் மதிப்பு 84.24 ரூபாய்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் திர்ஹாம் ஒன்றின் மதிப்பு 84.87 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
இலங்கையில் டொலர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் இலங்கை மத்திய வங்கி ரூபாவை குறைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.