Home இலங்கை கடந்த மூன்று ஆண்டு பல பகுதிகளிலும் நூதன திருட்டில் ஈடுபட்டு வந்த. 33 வயது பெண் கைது

கடந்த மூன்று ஆண்டு பல பகுதிகளிலும் நூதன திருட்டில் ஈடுபட்டு வந்த. 33 வயது பெண் கைது

0
கடந்த மூன்று ஆண்டு பல பகுதிகளிலும் நூதன திருட்டில் ஈடுபட்டு வந்த. 33 வயது பெண் கைது

யாழ்ப்பாணத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக பல பகுதிகளிலும் நூதன திருட்டில் ஈடுபட்டு வந்த. 33 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயார் தெல்லிப்பழை பொலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் அச்சுவேலி பகுதியை சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைதான பெண், வெளிநாட்டிலிருந்து விடுமுறையில் யாழ்ப்பாணத்திற்கு வருபவர்களிடம் மோசடி செய்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வெளிநாட்டிலிருந்து ஊருக்கு வருபவர்களிடம், பணம் மற்றும் நகைகளை குறித்த பெண் மோசடி செய்து வந்துள்ளார்.

வெளிநாட்டிலிருந்து வருபவர்களிடம், அங்குள்ளவர்கள் தமது உறவினர்களிற்கு கொடுத்து விடும், நகை மற்றும் பணத்தை, நூதனமாக திருடி வந்ததாக கைதான பெண் மீது பொலிசாரால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட பெண் யாழ் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளதாகவும் தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here