
இன்று அதிகாலை 4.00 மணியளவில் ரம்புக்கன புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டீசல் ஏற்றிச் செல்லும் புகையிரதம் மீது பயணிகளை ஏற்றிவந்த மற்றொரு புகையிரதம் மோதி விபத்துக்குள்ளாகியதாக தகவல் வெளியாகியுள்ளது.

புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் புகையிரதம் ஒன்று சாரதியின்றி பிரேக் பழுதானதன் காரணமாக பயணித்து சென்று, புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எரிபொருள் புகையிரதத்துடன் மோதியுள்ளது.
பின்னர், ரம்புக்கனை ரயில் நிலையத்தில் உள்ள கட்டிடம் ஒன்றின் மீதும் எரிபொருள் புகையிரதம் மோதியுள்ளது.

இதனால் புகையிரதத்தில் இருந்த பாரியளவிலான டீசல் கசிந்து வீணாகியுள்ளது.