கடந்த காலங்கள் போல் இல்லாமல் இது மிகவும் நேர்த்தியாக ஆலோசிக்கப்பட்டு முன்னெடுக்கப்படுகிறது. கடந்த காலங்களில் யார் இதை Lead பண்ணுவது என்ற பிரச்சினை தற்போது தீர்ந்துள்ளது.
Ratta , Konara Vlog மற்றும் அவரது குழுவினர் இதனை அழகான முறையில் ஒழுங்குபடுத்துகிறார்கள். Upul Sannasgala sir, Prasad Welikumbura போன்றவர்களின் ஆலோசனைகள் இந்தப்போராட்டத்தில் செயற்படுத்தப்படுகின்றன.
பல நேரங்களில் பெண்கள் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்கிறார்கள். எங்கிருந்தோவெல்லாம் உணவுப்பொதிகளும், பிஸ்கட்களும், தேநீரும் குளிர்பானங்களும் வந்த வண்ணம் இருக்கின்றன. யார் இதையெல்லாம் வழங்குகிறார்கள் என்று தெரியவில்லை.
5 நிமிடங்களுக்கு ஒரு தடவை ஏதாவதொன்றை கொண்டு வந்து தருகிறார்கள். வீதியில் வாகனங்களில் செல்வோர் உணவுப்பொதிகளை கொண்டு வந்து நீட்டுகிறார்கள். 2500 வருடங்கள் தன்சல் கொடுத்த வரலாற்றுடையடவர்கள் நாங்கள் என பல தடவைகள் உணர வைக்கிறார்கள்.
வாகனங்கள் எல்லாம் “கபுடு காக் காக்” என ஹோர்ன் அடிக்க மக்கள் “பெசில் பெசில் பெசில் பெசில்” என கூச்சலிடுகிறார்கள். வாகனங்களில் சிறுவர்கள் கோடாவிற்கு எதிரான Sloganகளை உடைய பதாதைகளை பிடித்த வண்ணம் செல்கிறார்கள்.
யாருமே குப்பைகளை கீழே வீசுவதில்லை… எங்கிருந்தோ ஒரு அணி வருகிறது அவற்றையெல்லாம் சேகரித்து கொண்டு செல்கிறது. பொலிசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் சிறந்த புரிந்துணர்வொன்று கட்டியெழுப்பப்பட்டுள்ளது. அவற்றை யாருமே மீறுவதாய் தெரிவதில்லை.
இங்கிருந்து அங்கு உணவும் தேநீரும் வழங்கப்படுகிறது. பொலிசார் ஷிஃப்ட் மாறி வீடு செல்லும் போது சில நேரங்களில் அவர்களும் கோஷங்களை எழுப்பியவாறு, பைக்களில் ஹோர்ன் அடித்தவாறு செல்கிறார்கள்.
அரசியல்வாதிகளும் வருகிறார்கள் ஆனால் மக்களோடு மக்களாய் கோஷங்களுக்கு பதில் கோஷங்களை எழுப்புபவர்களாகவே அவர்களும் இருக்கிறார்கள் யாரும் மைக் பிடித்து பேச முனைவதில்லை… முனையவும் விட மாட்டார்கள்.
First Aid இற்கு என்று வைத்தியர் குழு ஒன்று வந்து மக்களுக்கு உதவுகிறார்கள். பல இடங்களில் பனடோல்களும் சித்தாலேப்பைகளும் கிடக்கின்றன. மழை பெய்தால் ரெயின் கோர்ட்கள் பகிர்ந்தளிக்கப்படுகின்றன.
தங்குமிட மற்றும் மலசலகூட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நாளை அல்லது நாளை மறுதினம் முதல் நாட்டு மக்களுக்கு இலங்கை சட்டங்கள் பற்றியும், நாட்டின் இந்த நிலைக்கான காரணங்களையும் அதனை மீட்டெடுக்கும் வழிமுறைகளையும், இனி வரும் காலங்களில் மக்கள் எப்படி செயற்பட வேண்டும் எனவும் தினமும் ஒரு மணித்தியாலம் சட்டத்தரணிகள் மற்றும், பொருளாதார வல்லுனர்கள் மூலம் சொற்பொழிவுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த போராட்டம் இது ஒரு விழுமியமிக்க இளைஞர் கூட்டத்தை அடையாளம் காட்டியுள்ளது. ஒரு உணர்வுபூர்வமிக்க ஆர்ப்பாட்டத்தை அழகான முறையில் ஒழுங்குப்படுத்தி கொண்டு செல்கிறார்கள்.
ஒரு நாளாவது உங்கள் குடும்பம் சகிதம் போய் கலந்து கொள்ளுங்கள். கட்டாயம் குழந்தைகளையும் கூட அழைத்து செல்லுங்கள். அவர்களுக்கு முன்மாதிரியான இந்த இளைஞர்களை காட்டுங்கள்.
இந்த போராட்ட களமே போதும் ஒரு விழுமியமிக்க இளைஞனை உருவாக்க… மீண்டும் சொல்கிறேன் கட்டாயம் கலந்து கொள்ளுங்கள்.
இந்நாட்டில் இத்தனை நாளாய் தொலைந்து போய் இருந்த ஏதோவொன்று உங்கள் கண்களையும் ஈரமாக்கும் என முகநூல்வாசி ஒருவர் பதிவிட்டுள்ளார்.