பசில் ராஜபக்சவுக்கு கோவிட் தொற்று உறுதி!

நாட்டின் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதியாகியுள்ளது.

இதனால் அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.