பிந்திய செய்திகள்

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக் கணிப்பின் பிரகாரம் சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் !

(2022) ஆண்டுக்கான இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக் கணிப்பை 2.6 வீதமாக குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக் கணிப்பின் பிரகாரம் எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு 2.7 வீத வளர்ச்சியும் 2029 ஆம் ஆண்டு 2.9 வீத வளர்ச்சியும் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட உலகப் பொருளாதார கண்ணோட்ட கணிப்பின் பின்னர், அனைத்து உலக பொருளாதார நிலைமைகள் கணிசமானளவு மோசமடைந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.

இதேவேளை, ஒமைக்ரோன் வைரஸின் குறுகிய கால தாக்கத்திற்கு பின்னர், இவ்வாண்டின் இரண்டாவது காலாண்டில் இருந்து உலகளாவிய மீட்சி வலுவடையும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.

இருப்பினும், உக்ரைன் – ரஷ்யா போர் மற்றும் போரை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகள் காரணமாக அனைத்துலக பொருளாதார கண்ணோட்டமானது மோசமடைந்துள்ளது எனவும் சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.

இந்நிலையில், இலங்கையின் 2022 ஆம் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சியானது கடந்த ஜனவரி மாதத்தில் அறிவிக்கப்பட்டதை விட, 0.8 வீத வீழ்ச்சியை பதிவுசெய்து, 3.6 வீதமாக பதிவாகும் என சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, 2023 ஆம் ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சியும் 0.2 வீதத்தால் வீழ்ச்சி அடையும் எனவும் சர்வதேச நாணய நிதியம் தனது புதிய கணிப்பீட்டில் கூறியுள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts