அம்பாறை அட்டாளைச்சேனை , பாலமுனை வைத்தியசாலைக்கு முன்பாக சோதனைச் சாவடியில் இருந்த பொலிசாருக்கும் பொதுமக்களுக்குமிடையே ஏற்பட்ட முரண்பாடு ஏற்பட்ட நிலையில் 16 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பொலிஸ் சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் மற்றும் பொலிஸார் அப்பகுதி வழியாக தலைக்கவசம் (ஹெல்மெட் ) அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை விசாரணை மேற்கொண்ட சந்தர்ப்பத்தில் வாய்த்தர்க்கம் மோதலாக உருவாகி சம்பவம் இடம் பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதன்போது சம்பவ இடத்தில் ஒன்று கூடிய பொதுமக்களுக்கும் பொலிசாருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதுடன் இதனை கட்டுப்படுத்த பொலிசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் சம்பவத்தை அறிந்து அங்கு சென்ற அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, ஊடகவியலாளர் உட்பட் 10 இற்கும் மேற்பட்ட பொலிசார், பொதுமக்கள் என 16 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சம்பவம் சம்பவம் தொடர்பில் ஆராய கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி கமல் சில்வா உள்ளிட்ட பொலிஸ் உயர்மட்ட அதிகாரிகள் விசாரணையினை முன்னெடுத்து வருகின்றனர்.