நாட்டில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு நிலையை அடுத்து மகிந்த குடும்ப உறுப்பினர்கள் தப்பியோடி தமிழர் பகுதியில் தஞ்சம் புகுந்துள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
முன்னாள் பிரமரான மகிந்த ராஜபக்ச, ஷிரந்தி ராஜபக்ச மற்றும் ரோஹித ராஜபக்ச மற்றும் அவர்களது குடும்பத்தினர் இராணுவ ஹெலிகாப்டரில் திருகோணமலை கடற்படை முகாமில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
நேற்றிரவு அலரி மாளிகையில் பதுங்கி இருந்த மஹிந்த குடும்பம் இன்று அதிகாலை பலத்த இராணுவ பாதுகாப்புடன் அங்கிருந்து வெளியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்கள் திருகோணமலை படைத்தளத்தில் அடைக்கலம் தேடி சென்றுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் விமானப்படை தளத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட மக்கள் தற்போது தயராகி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்களும் அங்கு சென்றிருப்பதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.