பதிவாளர் நாயகம் திணைக்களம் பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ் பிரதிகள் வழங்கப்படுவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
உறுதிபடுத்தப்பட்ட பிரதிகளை வழங்கும் LNG தரவுக் கட்டமைப்பு செயலிழந்திருப்பதாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்காரணமாக நாடளாவிய ரீதியில் பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ் பிரதி விநியோகம் தடைப்பட்டுள்ளது.
அந்த தரவுக் கட்டமைப்பை திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த சேவை திருத்தப்பட்டதன் பின்னர் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என்று திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.













































