அனுமதிப்பத்திரம் இன்றி மாடுகளை ஏற்றிச்சென்ற ஒருவர் கைது!

வவுனியா ஓமந்தை பகுதியில் உரிய அனுமதிப்பத்திரங்கள் இன்றி மாடுகளை வாகனத்தில் ஏற்றிச்சென்ற நபர் ஒருவரை ஓமந்தை பொலிசார் கைதுசெய்துள்ளனர்.

இன்று காலை கிளிநொச்சியிலிருந்து புத்தளம் நோக்கிமாடுகளை ஏற்றிசென்ற வாகனம் ஒன்றை ஓமந்தை பகுதியில் வழிமறித்த பொலிசார் அதில் சோதனைகளை முன்னெடுத்தனர்.

இதன்போது அனுமதிப்பத்திரம் இன்றி அதிகளவான மாடுகள் ஏற்றிச்செல்லப்படுகின்றமை கண்டறியப்பட்டது.

குறித்த வாகனத்தின் சாரதியை கைதுசெய்த பொலிசார் மாடுகளையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர்.

கைதுசெய்யப்பட்டவர் மேலதிக விசாரணைகளின் பின்னர் நாளையதினம் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.