தமிழ்நாட்டு மக்களால் வழங்கப்படும் (இந்தியா )வழங்கும் நிவாரணப் பொதியில் இருந்து 20,000 பொதிகளை கிளிநொச்சி பிரதேச மக்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.
தமிழ்நாட்டு மக்களால் வழங்கப்படும் இந்த நிவாரணப் பொதியில் சுமார் 40 மில்லியன் பெறுமதியான உணவுப் பொட்டலங்கள் அடங்கியுள்ளது.
அத்துடன், கிளிநொச்சி மக்களின் பொருளாதார வறுமை குறித்து அரசாங்கம் முன்னரே உணர்ந்துகொண்டதன் விளைவாக 20,000 குடும்பங்களுக்கு நிவாரணப் பொதி வழங்கப்படவுள்ளதாக அரசாங்க அதிபர் கூறினார்.
இந்த நிவாரணப் பொதிகளை வழங்குவதற்கு பொருத்தமான நபர்களைத் தெரிவு செய்யும் நடவடிக்கைகள் கிராம மட்டத்தில் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்த கிளிநொச்சி அரசாங்க அதிபர், பொருத்தமான குடும்பங்களைத் தெரிவு செய்வதற்காக கிராம மட்டத்தில் முன்மொழிபவர்கள் மற்றும் அரச அதிகாரிகள் அடங்கிய விசேட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.