இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கு தேவையான உதவிகளை வழங்க ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் உறுதியளித்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை, நேற்றைய தினம் சந்தித்தபோது, அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
இதன்போது பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கையின் மருத்துவ நெருக்கடியை சமாளிக்க உலக சுகாதார ஸ்தாபனம் பூரண ஆதரவை வழங்கும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கை பிரதிநிதி வைத்தியர் அலகா சிங் உறுதியளித்தார்.
அலரிமாளகையில் இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களின் ஊட்டச்சத்து தேவைகளை மேம்படுத்துவதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் உறுதி பூண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்