Home இலங்கை கட்டுமான தொழில்துறை சார்ந்த 12 இலட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம்

கட்டுமான தொழில்துறை சார்ந்த 12 இலட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம்

0
கட்டுமான தொழில்துறை சார்ந்த 12 இலட்சம் பேர் வேலையிழக்கும் அபாயம்

இலங்கையில் தற்போது நிலவும் நெருக்கடியான சூழ்நிலை காரணமாக கட்டுமானத் தொழில்துறை சார்ந்த சுமார் 12 இலட்சம் பேர் அடுத்த மாதம் முதல் வேலையிழக்கும் அபாயத்தில் உள்ளதாக இலங்கை தேசிய கட்டுமான சங்கம் தெரிவித்துள்ளது.

கட்டுமான தொழில் துறையில் ஈடுபட்டுள்ள சுமார் 75% தொழிலாளர்கள் இவ்வாறு வேலை இழக்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் 800,000 முதல் 900,000 வரையிலான பணியாளர்கள் கட்டுமானத் துறையில் ஈடுபட்டுள்ளனர். கிட்டத்தட்ட 300,000 தொழிலாளர்கள் கட்டுமான தொழில்துறையுடன் தொடர்புடைய மறைமுக வழிகளில் வருவாய் ஈட்டுவோராக உள்ளனர்.

இந்நிலையில் தற்போது இலங்கையில் 90 சதவீதமான கட்டுமானப் பணிகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய கட்டுமான சங்கத்தின் தலைவர் எம்.டி. பால் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here