Home இலங்கை வெவ்வேறு இடங்களில் கண்டு பிடிக்கப்பட்ட மோட்டார் குண்டுகள்

வெவ்வேறு இடங்களில் கண்டு பிடிக்கப்பட்ட மோட்டார் குண்டுகள்

0

பொலிஸார் திருகோணமலை மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் இரண்டு மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டை மற்றும் மூதூர் பிரதேசங்களிலே குறித்த மோட்டார் குண்டுகள் நேற்று முன்தினம் (27) மாலை மீட்கப்பட்டுள்ளன.

புல்மோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 13ஆம் கட்டை காட்டு பகுதியில் மோட்டார் குண்டொன்று காணப்படுவதாக பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்து அப்பகுதிக்கு சென்ற பொலிஸார் மோட்டார் குண்டை மீட்டுள்ளனர்.

இம் மோட்டார் குண்டு 60 மில்லி மீட்டர் நிறை கொண்டது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட மோட்டார் குண்டை செயலிழக்கச் செய்வதற்கு திருகோணமலை நீதிமன்றில் அறிக்கையை பெற உள்ளதாகவும் இதனையடுத்து மோட்டார் குண்டை செயலிழக்க செய்ய உள்ளதாகவும் புல்மோட்டை பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளிவெட்டி-பாரதிபுரத்தைச் சேர்ந்த அப்துல்பரீட் நஜாத் என்பவர் தனது காணியில் மோட்டார் குண்டு ஒன்று காணப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here