இலங்கை மிகவும் கடினமான பொருளாதார நிலை மற்றும் கடுமையான கொடுப்பனவு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
நடந்துகொண்டிருக்கும் நெருக்கடியின் தாக்கம், குறிப்பாக மக்களுக்கு ஏற்படும் தாக்கம் குறித்து ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் செய்தித் தொடர்பாளர் ஜெர்ரி ரைஸ் தெரிவித்துள்ளார்.
மே மாதம் ஏற்கனவே நடைபெற்ற தொழில்நுட்ப கலந்துரையாடல்களை அடிப்படையாகக் கொண்டு அதிகாரிகள் மட்ட இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் இந்தக் குழு இலங்கையில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, எதிர்வரும் வாரங்களில் கொழும்புக்கு ஒரு தனிப்பட்ட பயணத்தைத் மேற்கொள்ள திட்டமிடுவதாகவும் அவர் கூறியுள்ளார்.