மேலுமொரு முடி வெட்டும் ஆசாமி சிக்கினர்!

இன்று (24-01-2022) திங்கட்கிழமை பண்டாரவளைப் பகுதியில் மாணவி ஒருவரது தலைமுடியை வெட்டிய நபரை, பண்டாரவளைப் பொலிஸாரால், கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது சம்பவம் ஹீல்ஓய புகையிரத நிலையத்தில் மறைந்திருந்த வேளையில் இடம்பெற்றுள்ளது.

ஹீல்ஓயாப் பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவி, பண்டாரவளை நகரில் தனியார் மேலதிக வகுப்பொன்றிற்கு சென்று, தனியார் பேருந்து ஒன்றில் ஹீல்ஓயாவிற்கு தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போதே, தலைமுடியை இழந்துள்ளார்.

இது குறித்து, பண்டாரவளைப் பொலிஸாருக்கு செய்த முறைப்பாட்டினையடுத்து, பொலிஸார் விரைந்து மேற்கொண்ட தேடுதலில், ஹீல்ஓய புகையிரத நிலையத்தில் மறைந்திருந்த நபரைக் கைது செய்தனர்.

இதன்போது குறித்த நபரின் உடைப் பையை சோதனையிட்ட பொலிசார், அந்த உடைப் பைக்குள் இருந்த மாணவிகள் மற்றும் யுவதிகளினது எனக் கருதப்படும் 38 நீண்ட தலைமுடிச் சுருள்களையும் கைப்பற்றினர்.

இதையடுத்து குறித்து நபர் பொலிஸ் விசாரணைக்குற்படுத்தப்பட்ட வேளையில், அழகிய பெண்களின் நீண்ட தலைமுடிகளை வெட்டி சேகரிப்பது தனது பொழுதுபோக்காக கொண்டிருப்பதாக வாக்குமூலம் வழங்கியதாக பொலிசார் தெரிவித்தனர்.

மேலும், அந்த நபர் 33 வயதுடைய திருமணமானவர் என காவல்துறையின்ர கூறினர்.

விசாரணைகளின் பின்னர், அவர் பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவாரென பண்டாரவளை பொலிசார் மேலும் தெரிவித்தனர்.