பிந்திய செய்திகள்

யாழ் .கொடிகாமத்தில் இராணுவத்தினர் துப்பாக்கி சூடு – கடத்தல்காரர் தப்பியோட்டம்!

யாழ்.கொடிகாமம் – கெற்பேலி பகுதியில் மணல் கடத்தியோர் எனச் சந்தேகிக்கப்படும் குழுவினர் மீது இராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. இதனையடுத்து மணல் கடத்தல் குழுவினர் அங்கிருந்து தலைதெறிக்க தப்பி ஓடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. மணல் கடத்தல் இடம்பெறுவதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து, சம்பவ இடத்தை முற்றுகையிட்ட இராணுவத்தினர் கடத்தல்காரர்களை கைது முற்பட்ட நிலையில் அவர்கள் ஓடியுள்ளனர்.

இதனையடுத்து இராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறப்படுகின்றது. சம்பவத்தையடுத்து உழவு இயந்திரம் கைப்பற்றப்பட்டதுடன் அதன் சாரதியும் கைது செய்யப்பட்டார்.

மேலும் கைப்பற்றப்பட்ட உழவு இயந்திரமும் அதன் சாரதியும் கொடிகாமம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts