Home இலங்கை தொலைபேசிக்காக மாணவி மீது கத்திக்குத்து நடாத்திய 23 இளைஞன் கைது…!

தொலைபேசிக்காக மாணவி மீது கத்திக்குத்து நடாத்திய 23 இளைஞன் கைது…!

0
தொலைபேசிக்காக மாணவி மீது கத்திக்குத்து நடாத்திய 23 இளைஞன் கைது…!

காலி லபுதுவப் பகுதியில் மாணவி ஒருவரை கத்தியால் குத்திவிட்டு,அவரிடமிருந்து தொலைபேசியை பறித்துச்சென்ற நபர் ஒருவரை அக்மீமன பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

உள்ள உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் பொறியியல் பிரிவில் கல்விகற்கும் மாணவியே இவ்வாறு தாக்குதலுக்குள்ளாகியுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் வயது 23 எனவும்,அவர் தனமல்வில பகுதியைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் காயமடைந்த மாணவி தற்போது கராப்பிட்டிய வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றார். அதேவேளை குறித்த மாணவியும் தனமல்வில பகுதியில் வசித்து வருபவர் என்றும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், கைதான சந்தேக நபரை இன்றைய தினம் காலி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here