பிந்திய செய்திகள்

வரையறுக்கபட்ட நெல்லிற்கான கொள்வனவு விலை!

நாட்டில் விவசாயிகளிடமிருந்து நெல்லினை கொள்வனவு செய்வதற்கான நிலையான விலையினை அரசாங்கம் நிர்ணயித்துள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே கூறியுள்ளார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பு ,இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது. இதன்போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

அதன்படி வெளியாகியுள்ள சில அமைச்சரவை முடிவுகள்,

  • 2020-2021 பெரும்போகத்தில் விளைச்சல் குறைந்து பாதிப்புகளை எதிர்நோக்கும் விவசாயிகளின் வருமானத்தை பாதுகாக்க 1கிலோ நெல்லுக்கு ரூ. 25 வீதம் நஷ்டஈடு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்காக 40,000 மில்லியன் ரூபாயை ஒதுக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது
  • பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள 450 சுகாதார நிலையங்களில் முதற்கட்டமாக 59 சுகாதார நிறுவனங்களை மாகாண சுகாதார அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
  • இன்று முதல் நெல் சந்தைப்படுத்தல் அதிகார சபை ஊடாக ஒரு கிலோ நெல் தலா 75 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்படும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts