பிந்திய செய்திகள்

யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த 4வயது சிறுமி!!

இன்று(25)காலை உடல் சுகயீனம் காரணமாக வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் மரணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சிறுமி சுகவீனம் காரணமாக யாழ் சங்கானை பிரதேச வைத்தியசாலை அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

சுவாச பிரச்சினை காரணமாகக் குறித்த மரணம் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சிறுமியின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

பண்டத்தரிப்பு – சாந்தை பகுதியைச் சேர்ந்த ரஷ்மிகா என்ற 4 வயது நிரம்பிய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts