பிந்திய செய்திகள்

இலங்கையின் முன்னாள் இராணுவ தளபதி எழுதிய நூல் இலங்கை அரச தலைவரிடம் கையளிப்பு

முன்னாள் இராணுவ தளபதியான ஓய்வுபெற்ற ஜெனரல் சாந்த கோட்டேகொட 36 ஆண்டு கால இராணுவ வாழ்க்கையில் பெற்ற அனுபவங்களை அடிப்படையாக கொண்டு “THE CONFLICT THAT ELUDED PEACE” என்ற நூலினை எழுதியுள்ளார்.

இந்த நூலின் முதல் பிரதி நேற்று அரச தலைவர் செயலகத்தில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவிடம் கையளித்துள்ளார்.

தரைப்படைப் பிரிவின் மேஜர் பதவியில் இருந்து இராணுவ தளபதியாக ஓய்வுபெறும் வரை இராணுவத்தில் அவர் செயற்பாட்டு ரீதியான பங்களிப்பை வழங்கியிருந்தார்.

போர் களத்தில் பெற்ற வெற்றிகள் மாத்திரமின்றி பின்னடைவுகள் தொடர்பான சரிநிகர் சமனான அளவில் இந்த நூலில் ஒப்பிட்டுள்ளதாக கோட்டேகொட குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் இராணுவ தளபதி எழுதிய நூல் அரச தலைவரிடம் கையளிப்பு - ஐபிசி தமிழ்

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts