பிந்திய செய்திகள்

மீண்டும் இலங்கை பொலிஸாருக்கு பயிற்யை ஆரம்பித்த பிரபல நாடு….!

இலங்கை பொலிஸாருக்கு மீண்டும் பயிற்சிகளை வழங்க பிரிட்டன் முயன்று வருவதாக சண்டே போஸ்ட் பத்திரகை கூறியுள்ளது. குறித்த பத்திகையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்து அதிகரித்துவரும் கரிசனைகள் காரணமாக ஸ்கொட்லாந்து இலங்கை பொலிஸாருக்கு பயிற்சி வழங்குவதை நிறுத்தியுள்ள போதிலும் பிரிட்டன் தொடர்ந்தும் பயிற்சிகளை வழங்கலாம்.

இலங்கை பொலிஸாரினால் கைது செய்து வைக்கப்பட்டிருந்தவேளை பாலியல்வன்முறைகள், மின்சாரசித்திரவதைகள், சித்திரவதைகளை அனுபவித்தவர்கள் இலங்கையிலிருந்து தப்பி ஸ்கொட்லாந்து வந்த பின்னர் தங்கள் அனுபவங்களை தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து மனித உரிமை அமைப்புகளும் ஆர்வலர்களும் ஸ்கொட்லாந்து பொலிஸார் இலங்கை பொலிஸாருக்கான பயிற்சிகளை நிறுத்தவேண்டும் என வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

தங்களின் நீண்ட கால பயிற்சி இலங்கை பொலிஸார் நடந்துகொள்ளும்விதத்தில் மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துவந்த ஸ்கொட்லாந்து பொலிஸ் கடந்த மாதம் இலங்கை பொலிஸாருக்கு பயிற்சி வழங்குவது குறித்த ஒப்பந்தத்தை கைவிட்டுள்ளது.

எனினும் பிரிட்டன் தான் இலங்கை பொலிஸாருக்கு பயிற்சிவழங்கும் நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தயார் என தெரிவித்துள்ளது.

ஸ்கொட்லாந்து பொலிஸார் தங்கள் பயிற்சிகளை நிறுத்திக்கொண்டதன் அர்த்தம் இலங்கை பொலிஸாருக்கு இங்கிலாந்தின் நிதியுதவியுடனான திட்டம் எதுவும் எதிர்காலத்தில் இருக்காது என்பதல்ல என பிரிட்டனின் வெளிவிவகார அலுவலகத்தின் கடிதம் தெரிவித்துள்ளது.

எந்த எதிர்கால திட்டத்திற்குமான தனது அணுகுமுறை குறித்து பிரிட்டிஸ் அரசாங்கம் பரிசீலித்துவருகின்றது தற்போதைய மறுஆய்வின் போது பல காரணிகளை கருத்தில் கொள்வோம் என பிரிட்டனின் வெளிவிவகார அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த முக்கியமான பிரச்சினைகள் குறித்து இலங்கைஅரசாங்கத்துடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகளில்ஈடுபட்டுள்ளோம் என தெரிவித்துள்ளது என சண்டே போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதிதிட்டத்தின் பிரான்சிஸ்ஹரிசன் இந்த செய்தி மிகுந்த ஏமாற்றமளிக்கின்றது என குறிப்பிட்டுள்ளார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts