பிந்திய செய்திகள்

மொனராகலையில் இடம் பெற்ற விபத்து: 1வர் உயிரிழப்பு – அறுவர் காயம்!

மொனராகலை தனமல்விலைப் பகுதில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற விபத்தில் வயோதிபப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், ஆறு பேர் படுகாயமடைந்துள்ளதாக தனமல்விலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வேனொன்றும், தனியார் பேருந்தொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளாகியதில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் மொனராகலை தனமல்விலைப் பகுதியின் கித்துல்கோட்டை என்ற இடத்தில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் ரன்ஜனி வீரசிங்க என்ற 65 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து படுகாயமடைந்த ஆறு பேரும் தனமல்விலை அரசினர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் வேனொன்றில் மிந்தெனியவில் இடம்பெற்ற மரணக்கிரியை ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் மீண்டும் வீடு திரும்புகையிலேயே, குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்த பெண்ணின் கணவரே வேனை செலுத்தியுள்ளார் என்றும் இவர்களது இரு மகள்கள் மற்றும் மூன்றுப் பேரப்பிளைகள் ஆகியோரே மரணக் கிரியைகளில் கலந்துகொண்டு திரும்பியவர்களென ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பாக தனியார் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், தனமல்விலைப் பொலிஸார் விபத்து குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts