பிந்திய செய்திகள்

2147 பட்டதாரிகளுக்கு மட்டக்களப்பில் நிரந்தர நியமனம்

நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 2,147 பட்டதாரி பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கமைவாக அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளுள் 287 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு, பின்தங்கிய கிராமங்கள் அபிவிருத்தி, உள்நாட்டு கால்நடை பராமரிப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன்; மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக் குழுத் தலைவருமாகிய சிவனேசதுரை சந்திரகாந்தன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நேற்று (25) இடம்பெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வு இடம்பெற்றது

இதனடிப்படையில் மாவட்ட செயலகத்திற்கு 13 பேரும், ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்திற்கு 19 பேரும், ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்திற்கு 14 பேரும், காத்தான்குடி பிரதேச செயலகத்திற்கு 12 பேரும், கோறளைப்பற்று பிரதேச செயலகத்திற்கு 7 பேரும், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்கு 8 பேரும், வாகரை மற்றும் கிரான் பிரதேச செயலகங்களுக்கு தலா 26 பேரும் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.
கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்திற்கு 8 பேரும், மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு 23 பேரும், மண்முனைப் பற்று பிரதேச செயலகத்திற்கு 15 பேரும், களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்திற்கு 48 பேரும், பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்கு 21 பேரும், வவுணதீவு பிரதேச செயலகத்திற்கு 18 பேரும் வெல்லாவெளி பிரதேச செயலகத்திற்கு 23 பேருமாக 281 பேர் நிரந்தர நியமனக் கடிதங்களை பெற்றுள்ளனர்.
பயிற்சிக் காலத்தினைப் பூர்த்தி செய்யாதவர்களுக்கும் இதன்போது நிரந்தர நிலையத்திற்கான இணைப்புக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் அவர்களது பயிற்சிக் காலம் நிறைவுற்றதும் அந்த நிலையத்திலேயே அவர்ளுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts