பிந்திய செய்திகள்

மகாவலி ஆற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

கம்பளை இல்வத்துர பகுதியில் உள்ள மகாவலி ஆற்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த பெண்ணின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் 50 முதல் 55 வயதுடைய பெண் என பொலிஸார் தெரிவித்தனர். ஆற்றங்கரையில் பெண்ணுடையது என சந்தேகிக்கப்படும் கைப்பை ஒன்றும் அதிலிருந்து 15,000 ரூபா பணமும் சில மருந்துகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த கம்பளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் லக்சிறி பெர்னாண்டோ, குறித்த பெண் தொடர்பான தகவல்கள் அப்பகுதி பொலிஸ் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். சடலம் கம்பளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts