பிந்திய செய்திகள்

கடற்படையில் மீண்டும் இணைந்த பி 494 ரக அதிவேக தாக்குதல் கப்பல்!

இலங்கை கடற்படையில் பி 494 ரக அதிவேக தாக்குதல் இயந்திரக் கப்பலை கையளிக்கும் நிகழ்வு கிழக்குப் பிராந்திய கடற்படையின் கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சஞ்வீச டயஸின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வு திருகோணம‍லையிலுள்ள கடற்ப‍டையின் கடற்பரப்புப் பகுதில் நடைபெற்றது. 1997 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட பி 494 ரக அதிவேக தாக்குதல் இயந்திரக் கப்பலானது, கொழும்பு கப்பல் கடற் பரப்பில் 22 ஆண்டு காலமாக தொடர்சியாக பயன்பாட்டில் இருந்து வந்தது.

இந்த இயந்திரக் கப்பலை அதி நவீன மயப்படுத்துவதற்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் அறிவுரைக்கு அமைவாக கிழக்குப் பிராந்திய கடற்படை பொறியிலாளர்கள் பிரிவால் கடந்த 2019 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பழுதுபார்த்தல் வேலைத்திட்டமானது இந்த வருடம் முடிக்கப்பட்டது.

திருத்தியமைக்கப்பட்ட பி 494 ரக அதிவேக தாக்குதல் இயந்திரக் கப்பலில் உள்ளேயும் வெளியேயும் காணப்படும் பாகங்கள், பிரதான இயந்திரம், ஜெனரேட்டர் இயந்திரம், கியர் பொக்ஸ் என்பன புதிய செயற்பாட்டுடன் திருத்தியமைக்கப்பட்டுள்ளது.

கப்பலை கையளிக்கும் நிகழ்வில் , கமாண்டோ வசந்த கந்தவின்ன, கடற்படை மற்றும் சமுத்திர விஞ்ஞான பீடத்தின் கட்டளைத் தளபதி கமாண்டோ டேமியன் பெர்னாண்டோ, அதிவேக தாக்குதல் 4 ஆவது படையணியின் கட்டளை அதிகாரி கமாண்டோ ராஜபிரிய சேரசிங்க உள்ளிட்ட கிழக்குப் பிராந்திய கடற்படையின் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts