பிந்திய செய்திகள்

காணாமல்போன நீல நிற கிளிகள் கிடைத்தன..!

இலங்கை தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையிலிருந்து 8 மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன, நீல நிறத்திலான மாலையை ஒத்ததான தொண்டை பகுதியை கொண்ட கிளி, கிடைத்துள்ளதாக மிருகக்காட்சிசாலை அறிவித்துள்ளது.

களுபோவில பகுதியைச் சேர்ந்த தம்பதியினர், இந்த கிளியை மிருகக்காட்சிசாலையிடம் ஒப்படைத்துள்ளனர்.களுபோவில பகுதியிலுள்ள தமது வீட்டிற்கு சில மாதங்களுக்கு முன்னர், குறித்த கிளி பறந்து வந்துள்ளதாகவும், உரிமையாளர் எவரும் வருகைத் தராமையினால் இதுவரை தாம் அந்த கிளியை பராமரித்து வந்துள்ளதாகவும் அந்த தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.

இந்த கிளி காணாமல் போனமை குறித்து, ஊடகங்களில் வெளியான செய்தியை அடிப்படையாகக் கொண்டு, இந்த கிளி மிருகக்காட்சிசாலையிலிருந்து காணாமல் போன கிளியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் மிருகக்காட்சிசாலையிடம் ஒப்படைத்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

Trueceylon News (Tamil) – Tamil News Channel

இதன்படி, மிருகக்காட்சிசாலையிலிருந்து காணாமல் போன கிளி என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இந்த கிளி கிடைக்கப் பெற்றதை அடுத்து, தெஹிவளை பொலிஸாருக்கு, மிருகக்காட்சிசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதையடுத்து, பொலிஸார், குறித்த தம்பதியிடம் வாக்குமூலம் பதிவு செய்துக்கொண்டுள்ளனர்.

இதேவேளை, மிருகக்காட்சிசாலையிலிருந்து கடந்த செப்டம்பர் மாதம் பறந்து சென்ற மற்றுமொரு நீல நிற கிளியொன்று இரத்மலானை பகுதியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts