பிந்திய செய்திகள்

மட்டக்களப்பில் அதிகாலையில் தீப்பற்றிய கடை!

இன்று (29) அதிகாலையில் மட்டக்களப்பு மாமாங்கத்தில் பலசரக்கு கடை ஒன்று தீப்பற்றி எரிந்து முற்றாக சேதமடைந்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாமாங்கம் 3 ம் குறுக்கு வீதியில் வீடு ஒன்றுடன் பலசரக்கு கடையை நடாத்தி வரும் அதன் உரிமையாளர் வழமைபோல நேற்று (28) இரவு பூட்டி சென்றுள்ள நிலையில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் கடை தீப்பற்றியுள்ளது.

அதிகாலை தீப்பற்றிய கடை!

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு பொலிஸ் தடயவியல் பிரிவினர் வரவழைக்கப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts