பிந்திய செய்திகள்

அதிகாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு!

இன்று (29) அதிகாலை தெற்கு அதிவேக வீதியின் கடவத்தை – கடுவலை 16 ஆம் தூண் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

அதிவேக வீதியில் பயணித்த லொறியின் டயர்கள் பழுதடைந்துள்ளதால் அதனை திருத்துவதற்காக வீதியோரத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.

இதன்போது வீதியால் பயணித்த மற்றுமொரு லொறி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

விபத்தில் லொறியின் சாரதி தூக்கி எறியப்பட்டு வீதியில் விழுந்துள்ள நிலையில் லொறியின் இடது இருக்கையில் அமர்ந்திருந்த லொறியின் உரிமையாளர் லொறி தீப்பற்றி எரிந்ததில் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியின் சாரதியும் உதவியாளரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts