பிந்திய செய்திகள்

2022ம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை எத்தனை தெரியுமா?

இந்த ஆண்டில்(2022) இதுவரையான காலப்பகுதியில் 20க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

எனவே நீர்நிலைகளில் குளிக்கும்போதும், பொழுதுபோக்குகளில் ஈடுபடும் போதும் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வருடாந்தம் நீரில் மூழ்கி சுமார் 12 பேர் உயிரிழப்பதாக பொலிஸ் கடற்படைப் பிரிவின் பணிப்பாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பிரியங்கர டி சில்வா கூறினார்.

கடந்தாண்டு நீரில் மூழ்கிய 33 பேரை பொலிஸார் காப்பாற்றியதாகவும், இருப்பினும் 2022 இல் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடும் முன், ஆறுகள், ஏரிகள் மற்றும் கடலில் நீராடுவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டுமெனவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அறிவுறுத்தியுள்ளார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts