பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன்(30-1-2022)

மேஷ ராசி

அன்பர்களே, குடும்பத்தில் நல்ல விஷயங்கள் நடக்கும். செலவுகள் கட்டுக் கடங்காமல் போகும். எதிர்மறை எண்ணங்கள் மனதை விட்டு அகலும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

ரிஷப ராசி

அன்பர்களே, புதிய முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கும். சொத்து விவகாரத்தில் இழுபறி நிலை நீடிக்கும். கணவன் மனைவிக்குள் சின்ன மனஸ்தாபம் வரும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

மிதுன ராசி

அன்பர்களே, நல்ல தகவல் ஒன்று காதில் விழும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் வரும். சாட்சி கையெழுத்து போட வேண்டாம். தொழில், வியாபாரத்தில் விரிவாக்கம் ஏற்படும்.

கடக ராசி

அன்பர்களே, குடும்பத்தில் அனுகூலமான பலன்கள் கிட்டும். வீடு, மனை வாங்கும் எண்ணம் வரும். புது நண்பர்கள் அறிமுகமாவர். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.

சிம்ம ராசி

அன்பர்களே, குடும்ப சூழ்நிலைக்கு ஏற்ப நடப்பது நல்லது. அடிக்கடி பயணங்களால் விரயங்கள் ஏற்படும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

கன்னி ராசி

அன்பர்களே, புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். பொதுக் காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். புது தொழில் யோகம் அமையும்.

துலாம் ராசி

அன்பர்களே, சுற்றி இருப்பவர்களின் ஆதரவுப் பெருகும். வீட்டு தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். உடல் சோர்வு நீங்கும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

விருச்சிக ராசி

அன்பர்களே, நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் சில சலுகைகள் கிடைக்கும்.

தனுசு ராசி

அன்பர்களே, குடும்பத்தை பற்றிய சிந்தனை அதிகமாகும். எதிர்பார்த்த காரியங்கள் தாமதமாகும். ஆன்மீக விஷயங்களில் ஆர்வம் கூடும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

மகர ராசி

அன்பர்களே, குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் குறையும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

கும்ப ராசி

அன்பர்களே, மனதில் தெளிவு நிலை உண்டாகும். விலகி நின்ற சொந்தங்கள் விரும்பி வந்து இணைவர். அக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் திருப்புமுனை ஏற்படும்.

மீன ராசி

அன்பர்களே, குடும்பத்தில் முக்கிய நிகழ்வுகள் நடக்கும். உடல் நலம் சீராகும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிட வேண்டாம். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts