பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (31-01-2022)

மேஷ ராசி

அன்பர்களே, எதிர்காலம் பற்றிய திட்டங்கள் மனதில் இருக்கும். உறவினர்களுடன் சிறிய மனஸ்தாபம் வரும். கடன் தொந்தரவு இருக்கும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு.

ரிஷப ராசி

நேயர்களே, குடும்ப பெருமையை உயர்த்த முடியும். இக்கட்டான நேரங்களில் மாறுபட்ட அணுகுமுறையை கையாளவும். நட்பால் நன்மை வந்து சேரும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

மிதுன ராசி

அன்பர்களே, குடும்பத்தில் குதூகலமும், ஒற்றுமையும் நிரம்பி இருக்கும். பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் வரும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

கடக ராசி

அன்பர்களே, நீண்ட நாள் சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும். முன்கோபத்தை குறைக்கவும். திட்டமிட்ட பயணங்கள் தாமதமாகும். தொழில், வியாபாரத்தில் சுமாரான லாபம் இருக்கும்.

சிம்ம ராசி

நேயர்களே, கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதில் சிரமம் இருக்கும். அனாவசிய பேச்சுக்களை தவிர்க்கவும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்

கன்னி ராசி

அன்பர்களே, முக்கிய நபர் ஒருவரை ஒருவரை சந்திக்க நேரிடும். தவிர்க்க முடியாத செலவுகள் வரும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். உத்தியோகத்தில் ஆதரவு பெருகும்.

துலாம் ராசி

அன்பர்களே, குடும்பத்தில் வளைந்து கொடுத்து போகவும். பண விஷயத்தில் கவனம் தேவை. புதுமையான விஷயங்களில் ஆர்வம் கூடும். தொழில், வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும்.

விருச்சிக ராசி

அன்பர்களே, குல தெய்வ வழிபாடு நல்ல பலனை தரும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். மன வலிமை கூடும். தொழில், வியாபாரத்தில் மிதமான லாபம் இருக்கும்.

தனுசு ராசி

அன்பர்களே, குடும்பத்தில் மருத்துவ செலவுகள் வரும். உறவினர்கள் உதவி கேட்டு தொந்தரவு செய்வர். காரிய தடை விலகும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

மகர ராசி

அன்பர்களே, யாரிடத்திலும் விவாதம் செய்ய வேண்டாம். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பெற்றோர்களின் அன்பும், ஆதரவும் கிட்டும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

கும்ப ராசி

அன்பர்களே, எதிரி தொல்லை சுவடு தெரியாமல் மறையும். வேண்டியவர்கள் மூலம் தேவையானது கிடைக்கும். எதிர்ப்புகள் அடங்கும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும்.

மீன ராசி

நேயர்களே, எதிர்பார்ப்புகள் சீக்கிரத்தில் நிறைவேறும். நண்பர்கள் ஆதரவாகப் பேச தொடங்குவர். விரும்பிய பொருட்களை வாங்க முடியும். உத்யோகத்தில் அலைச்சல் இருக்கும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts