பிந்திய செய்திகள்

இந்தவார ராசி பலன் (31-01-2022 முதல் 06-02-2022வரை)

மேஷ ராசி

அன்பர்களே, இந்த வார பலன்படி, புத்தி சாதூரியமும் அறிவுத்திறனும் அதிகரிக்கும். உங்கள் வருமானத்திற்கு ஏற்ற செலவுகள் செய்தால் குடும்பத்தில் பிரச்சனைகள் குறையும். அந்நிய நபர்களிடம் சற்று கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை இருக்கும். உறவினர்கள் மூலம் சில நன்மைகளை எதிர்பார்க்கலாம். வீடு மாற வேண்டிய சூழல் வரும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். குலதெய்வ வழிபடு சிறப்பை தரும். வீட்டில் சில பொருள் சேர்க்கை ஏற்படும். மனதில் ஏற்பட்ட குழப்ப நிலை நீங்கும். எந்த ஒரு விஷயத்திலும் தொடர்ந்து முயற்சி செய்தால் வெற்றி தானாக வந்து சேரும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும். தொழில், வியாபாரத்தில் புது முயற்சிகள் கைகூடும்.
பரிகாரம் : முருகரை விரதமிருந்து வழிபடவும்.

ரிஷப ராசி

அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் எதிர்பார்த்த மன அமைதி கிடைக்கும். தேக ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வரும் கெடுபலன்கள் குறைந்து நல்ல காரியங்கள் நடக்க ஆரம்பிக்கும். குடும்ப வருமானம் ஓரளவு திருப்திகரமாக இருக்கும். பிரியமானர்களுடன் சின்ன மனஸ்தாபம் ஏற்படும். . குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். வாழ்க்கைதுணையின் ஆதரவால் எதிலும் வெற்றி கிடைக்கும். புதிய வீடு, மனை வாங்குவது குறித்த யோசனை வரும். மனதில் எண்ணிய காரியங்கள் விரைவில் கைகூடும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் சீக்கிரத்தில் முடியும். உத்யோகத்தில் பணிச்சுமை குறையும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.
பரிகாரம்: குலதெய்வ வழிபாடு நன்மை தரும்.

மிதுன ராசி

அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் இருந்த எதிர்ப்புகள் தானாக நீங்கும். எதிர்பார்த்த காரியங்கள் காலதாமதமின்றி நடக்கும். பொருளாதாரம் தொடர்பாக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை ஏற்படும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் ஏற்படலாம். நட்பு வட்டத்தில் நிதானமாகப் பழகுவது நல்லது. உறவினர்கள் உங்களிடம் அன்பு பாராட்டுவர். கணவன் மனைவிடையே இருந்த மனக்கசப்பு மாறும். உங்கள் செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவர். வாகனத்தில் செல்லும் போது பொறுமை அவசியம். நெருக்கடியான நேரத்தில் கூட எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும்.
பரிகாரம் : தினமும் கிருஷ்ண கவசம் படிக்கவும்

கடக ராசி

அன்பர்களே, இந்த வார பலன்படி, நீண்ட நாட்களாக தடைபட்டு வந்து காரியத்தை விரைந்து முடிக்க முடியும். மனதில் சஞ்சலம் ஏற்பட்டாலும் அதிர்ஷ்டம் உண்டாகும். அடுத்தவர் சொல்வதை நம்பும் முன் அதைப்பற்றி ஆலோசனை செய்வது நல்லது. குடும்ப விஷயங்களில் ஆர்வம் கூடும். விலகிப்போன சொந்தங்கள் மீண்டும் உங்களை தேடி வருவர். குடும்பத்தில் சிக்கனத்தை கடைப்பிடிக்கவும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த ஈகோ பிரச்சனை நீங்கும். சிறு சிறு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது, ஆகையால் உடல் நிலையில் அதிக கவனம் தேவை. கடன் பிரச்சனைகள் குறைய ஆரம்பிக்கும். பெண்கள் வழியில் ஆதாயம் உண்டு. உத்யோகத்தில் கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.
பரிகாரம் : பைரவரை வணங்கி வழிபடவும்.

சிம்ம ராசி

அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்துக்காக நிறைய உழைக்க வேண்டியதிருக்கும். எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட தாமதமாகலாம். எந்த விஷயத்திலும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது. குடும்பத்தில் பெரிய செலவுகள் ஏதும் வர வாய்ப்பில்லை. சிறிய செலவுகள் அனைத்தும் கட்டுக்குள் இருக்கும். உங்கள் திட்டங்களை பற்றி வெளியில் விவாதிப்பதை தவிர்ப்பது நல்லது. உறவினர்கள் மத்தியில் இருந்த பழைய பகை மாறும். குடும்பத்தில் ஏற்பட்ட சோதனைகள் நீங்கும். சில நேரங்களில் எதை செய்வது எதை விடுவது என்ற தடுமாற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் அலைச்சல் இருக்கும். தொழில், வியாபாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும்.
பரிகாரம் : ஞயிற்றுக்கிழமையில் சிவ வழிபடு செய்யவும்

கன்னி ராசி

அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் திருப்திகரமான சூழல் இருக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நீங்கள் கேட்ட இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும். வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவதும் நன்மை தரும். குடும்பத்தில் அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. திருமண காரியம் கைகூடும். உறவினர் மத்தியில் மதிப்பு, மரியாதை கூடும். பழைய கடன் தொந்தரவு ஒரு புறம் இருக்கும். தூர பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். பெற்றோரின் முழு ஆதரவு கிடைக்கும். உறவினர்களிடம் இருந்த கருத்துவேறுபாடு மறையும். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும்.
பரிகாரம் : மஹாவிஷ்ணுவை வணங்கி வழிபடவும்

துலாம் ராசி

அன்பர்களே, இந்த வார பலன்படி, எதிர்பார்த்த இடத்திலிருந்து வரும் தகவல்கள் மன திருப்தியை தருவதாக இருக்கும். எதற்காகவும், யாருக்காகவும் வளைந்து கொடுக்க வேண்டாம். குடும்ப உறுப்பினர்களிடம் நல்ல ஒற்றுமை இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் எந்த பிரச்னையும் இருக்காது. பாலிய நண்பர்களின் சந்திப்பும் அவர்களால் நன்மையும் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பர். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். குடும்பம் பற்றிய கவலைகள் ஏற்பட்டாலும் அவை முற்றிலும் நீங்கிவிடும். உங்கள் விருப்பத்துக்கு மாறாக சில காரியங்கள் நடந்தாலும் முடிவு சாதகமாகவே இருக்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
பரிகாரம் : சுக்கிர பகவானை வணங்கி வழிபடவும்

விருச்சிக ராசி

அன்பர்களே, இந்த வார பலன்படி, எதையும் எதிர்கொள்ளும் ஆற்றலும் துணிச்சலும் உண்டாகும். புதிய திட்டங்களை செயல்படுத்த வழி கிடைக்கும். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனமாக இருப்பது நல்லது. குடும்ப பெரியோர்களின் அன்பும், ஆசியும் கிட்டும். இஷ்ட தெய்வ வழிபாடு மனநிம்மதியை தரும். குடும்ப பிரச்சனைகள் வெகுவாக குறையும். தேவையற்ற மனசஞ்சலத்தை தவிர்க்கவும். உறவினர்களின் உறவு புதுப்பிக்கப்படும். கணவன் மனைவிடையே கருத்துவேற்றுமை ஏற்பட வாய்ப்புண்டு. கடன் தொல்லை நீங்கும். யாரிடமும் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும். உத்தியோகத்தில் இருந்த எதிர்ப்புகள் குறையும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும். பரிகாரம் : ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றி வழிபடவும்

தனுசு ராசி

அன்பர்களே, இந்த வார பலன்படி, தெய்வ அனுகூலத்தால் கடினமான காரியங்களையும் எளிதாக முடிக்க முடியும். பொருளாதார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். அடுத்தவரின் ஆலோசனைக்கு செவி சாய்க்க வேண்டாம். வாகன பயணங்களிலும் இரவு நேர பயணங்களிலும் கவனமாக இருக்கவும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். கணவன் மனைவிடையே சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு பின் சீராகும். பல தடங்கலுக்கு பணம் கைக்கு வந்து சேரும். பூர்வீக சொத்துக்களில் ஒரு சில வில்லங்கம் இருக்கும். உங்களை சுற்றி இருப்பவர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்ளவும். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
பரிகாரம் : தட்சிணாமூர்த்தியை தீபம் ஏற்றி வழிபடவும்.

மகர ராசி

அன்பர்களே, இந்த வார பலன்படி, குடும்பத்தில் விட்டுக்கொடுத்து போவது பல வகையில் நன்மையை தரும். புதிய நண்பர்கள் அறிமுகமாவர். பிரியமானவர்கள் சந்திப்பு நிகழும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. பெற்றோர் உடல் நிலையில் முன்னேற்றம் தெரியும். மறைமுக எதிரிகள் பலம் குறையும். அடுத்தவருக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். மனதில் புது தெம்பும் உற்சாகமும் தோன்றும். கணவன் மனைவிடையே நெருக்கும் கூடும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். உத்யோக பணிகளை கவனமாக செய்யவும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.
பரிகாரம் : ஸ்ரீ ராகவேந்திரரை வியாழக்கிழமையில் வழிபடவும்

கும்ப ராசி

அன்பர்களே, இந்த வார பலன்படி, கையில் எடுத்த வேலையை கச்சிதமாக முடிக்க முடியும். முன் கோபத்தை கட்டுப்படுத்தவும். உங்களுக்கு சம்பந்தம் இல்லாத விஷயங்களில் தலையிடாமல் ஒதுங்கியே இருப்பது நல்லது. குடும்ப பிரச்னைகளில் சாதகமான முடிவே உண்டாகும். சொத்து விவகாரங்களில் எதிர்பார்த்தபடி சாதகமான தீர்ப்பு வரும். உடல் நிலையில் கவனம் தேவை. கணவன் மனைவி மனம் விட்டு பேசுவது நன்மை தரும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் புது நபர்களின் வருகை அதிகரிக்கும். அடிக்கடி பயணங்களால் உடல் அலைச்சல் உண்டாகும். உத்யோகத்தில் உங்கள் திறமைகள் வெளிப்படும். தொழில் வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும்.
பரிகாரம் : விநாயகரை அருகம்புல் வைத்து வழிபடவும்.

மீன ராசி

அன்பர்களே, இந்த வார பலன்படி, வாக்கு சாதுரியத்தால் அதிக நன்மை உண்டாகும். மனதில் நல்ல எண்ணங்கள் உதிக்கும். சமூக அந்தஸ்து வெகுவாக உயரும். சொந்த பந்தங்களால் ஆதாயம் உண்டு. நீண்ட நாட்களாக இருந்த காரியங்கள் சீக்கிரத்தில் முடியும். பழைய வீட்டை சீரமைக்க வேண்டிவரும். உறவினர்கள் உதவி கேட்டு வருவர். கணவன் மனவிடையே இனம் புரியாத சந்தோஷம் ஏற்படும். நண்பர்கள் சிலர் எதிராக செயல்பட வாய்ப்புண்டு. குடும்பத்திற்கு தேவையான பொருள் உதவி கிடைக்கும். பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். திட்டமிட்ட காரியத்தை சிறப்பாக முடிக்க முடியும். உத்தியோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.
பரிகாரம் : பைரவரை வணங்கி வழிப்படவும்

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts