பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன்(26-01-2022)

மேஷ ராசி

அன்பர்களே, குடும்பத்திற்கு இருந்த எதிர்ப்புகள் அடங்கும். பெற்றோர்களிடம் சின்ன மனஸ்தாபம் வரும். அடுத்தவர் விவகாரத்தில் தலையிட வேண்டாம். உத்யோக மாற்றம் ஏற்படும்.

ரிஷப ராசி

அன்பர்களே, குலதெய்வ வழிபாடு மன அமைதிக்கு வழிவகுக்கும். உறவினர்களால் தேவையான உதவிகள் கிடைக்கும். திருமணம் காரியம் கைகூடும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.

மிதுன ராசி

அன்பர்களே, குடும்பத்தில் சிக்கனத்தை கடைப்பிடிக்கவும். உடல் தொந்தரவுகள் முற்றிலும் நீங்கும். வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை இருக்கும்.

கடக ராசி

அன்பர்களே, குடும்ப பெரியோர்களின் அறிவுரைகள் கிடைக்கும். வாக்கு சாதுரியம் ஏற்படும். அனாவசிய பேச்சுக்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் உயர் பதவி தேடி வரும்.

சிம்ம ராசி

அன்பர்களே, புது நண்பர்களோடு பழகும் போது கவனமாக இருக்கவும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வீட்டில் சுப செலவுகள் நிறைய உண்டு. உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.

கன்னி ராசி

அன்பர்களே, குடும்ப பெருமையை உயர்த்த முடியும். எதிர்பாராத தனயோகம் உண்டு. பொது காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். புது தொழில் யோகம் அமையும்.

துலாம் ராசி

அன்பர்களே, எதிர்கால திட்டங்கள் நிறைவேறும். மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். புது வீட்டிற்கு குடிபெயரும் வாய்ப்பு உருவாகும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.

விருச்சிக ராசி

அன்பர்களே, குடும்பத்தில் நல்ல விஷயங்கள் நடக்கும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை தீரும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும்.

தனுசு ராசி

அன்பர்களே, மனதிற்கு ஒப்பாத செயலில் ஈடுபட வேண்டாம். தடைபட்ட உறவு மீண்டும் துளிர்க்கும். பணம் வரவில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் உயர்வு நிலை உண்டு.

மகர ராசி

அன்பர்களே, குடும்ப நலனில் அக்கறைகொள்ளவும். பிரியமானவர்கள் வழியில் இருந்து மனக்கசப்பு மாறும். கடன் தொந்தரவு இருக்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

கும்ப ராசி

அன்பர்களே, சமூக அந்தஸ்து உயரும். எதையும் வெளிப்படையாக பேசுவது நல்லது. வீண் விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும்.

மீன ராசி

நேயர்களே, கஷ்டமில்லாத சுக வாழ்க்கை உண்டாகும். நினைத்தபடி காரியங்களை செயலாற்ற முடியும். எதிர்பாராத மருத்துவ செலவு வரும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts