பிந்திய செய்திகள்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (28-01-2022)

மேஷ ராசி

நேயர்களே, உங்களைப் அருமை, பெருமைகளை மற்றவர்கள் புரிந்துக் கொள்வர். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை வளரும். தொழில், வியாபாரம் சிறக்கும்.

ரிஷப ராசி

நேயர்களே, குடும்பத்தில் மங்கள நிகழ்வு உண்டு. மனதில் சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வீண் விவாதங்களை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

மிதுன ராசி

நேயர்களே, குடும்பத்தில் குதூகலம் நிறையும். யதார்த்தமாக பேசுவதை கூட சிலர் தவறாக புரிந்துகொள்வர். வேற்றுமதத்தவர் வலிய வந்து உதவுவர். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

கடக ராசி

நேயர்களே, உங்கள் திறமைகளை வெளிப்பட ஆரம்பிக்கும். முக்கிய நபர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். காரிய தடை விலகும். உத்யோகத்தில் ஆதரவு பெருகும்.

சிம்ம ராசி

நேயர்களே, குடும்ப பெரியோர்களின் அறிவுரை கிடைக்கும். வீடு மாற்றும் எண்ணம் வரும். விருந்தினர்களின் வருகை சந்தோஷத்தை தரும். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.

கன்னி ராசி

நேயர்களே, குடும்பத்தில் புது திட்டங்கள் நிறைவேறும். தேக ஆரோக்கியம் பலம் பெரும். திடீர் பண விரையம் ஏற்படும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.

துலாம் ராசி

நேயர்களே, தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிரியமானவர்கள் நேசம் கரம் நீட்டுவர். வாகன பராமரிப்பு செலவு கூடும். உத்யோகத்தில் ஏற்பட்ட சிக்கல் தீரும்.

விருச்சிக ராசி

நேயர்களே, குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். எதிர்பாராத மருத்துவச் செலவுகள் வரும். மனதிற்கு இதமான செய்தி ஒன்று வரும். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும்.

தனுசு ராசி

நேயர்களே, புதுமையான விஷயங்களில் ஆர்வம் கூடும். அநாவசியச் செலவுகளைத் தவிர்க்கவும். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழில், வியாபாரம் நல்ல வளர்ச்சி பெரும்.

மகர ராசி

நேயர்களே, குடும்பத்தில் நல்ல ஒரு அங்கீகாரம் கிடைக்கும். ஆன்மீக ஆர்வம் கூடும். கடன் பிரச்சனை கட்டுக்குள் வரும். தொழில், வியாபாரத்தில் புது முதலீட்டை தவிர்க்கவும்.

கும்ப ராசி

நேயர்களே, குடும்ப சிக்கல்கள் குறைய தொடங்கும். பண விஷயத்தில் கறாராக இருக்கவும். பெற்றோரின் அன்பை பெற முடியும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.

மீன ராசி

நேயர்களே, அடுத்தவர்களை நம்பி எந்த வேலையும் செய்ய வேண்டாம். திட்டமிட்ட பயணங்கள் தாமதப்படும். ஆடம்பர பொருள் சேர்க்கை உண்டாகும். வியாபாரம் சூடு பிடிக்கும்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts