பிந்திய செய்திகள்

விமானம் மற்றும் ஹெலிகொப்டர்கள் மூலம் பயணத்தை மேற்கொண்டு 150 இலட்சத்தை செலுத்தாத அமைச்சர்கள்

இலங்கையில் 15 வருடங்களாக ஆட்சியில் இருந்த அரசாங்கத்தின் உயர்மட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் விமானம் மற்றும் ஹெலிகொப்டர்கள் மூலம் பயணத்தை மேற்கொண்டபோதிலும் அதற்குரிய கட்டணத்தை விமானப்படைக்கு செலுத்தியிருக்கவில்லை என தெரியவந்துள்ளது.

இதன்படி, இலங்கை விமானப்படைக்கு சுமார் 150 இலட்சம் ரூபாய் செலுத்தப்படாமல் உள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

2003-2018 ற்கு இடைப்பட்ட சுமார் 10 ஆண்டுகளில் விமானப்படைக்கு செலுத்த வேண்டிய தொகை ரூ. 6 மில்லியனுக்கும் அதிகமாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

2013-2018 காலப்பகுதியில் இதேபோன்ற நிலுவை விமானப்படைக்கு வழங்கப்பட வேண்டும் என்பதை கணக்காய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இது தொடர்பில் அரசாங்க நிறுவனங்களுக்கு எழுத்து மூலம் பல தடவைகள் விமானப்படையால் அறிவிக்கப்பட்டும் அந்த அரச நிறுவனங்கள் அதனை கவனத்தில் கொள்ளவில்லை.

இது தொடர்பில் விமானப்படையினரால் உள்ளக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரியவருகிறது.

விமானங்கள் மற்றும் ஹெலிகொப்டர்களை பயன்படுத்தியது பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சகத்தில் பதவி வகிக்கும் அமைச்சர்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விமானப்படை, பாதுகாப்பு அமைச்சின் ஊடாக நிதியமைச்சகத்திற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts