பிந்திய செய்திகள்

முடக்கப்படுமா இலங்கை..!

மீண்டும் நாட்டை முடக்குமாறு பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், அது தொடர்பில் எந்த விதமான தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என சுகாதார சேவைகள் பயணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இத்தருணத்தில் நாட்டை முடக்குவது பிரச்சினைக்குத் தீர்வாகாது என்றும் தெரிவித்துள்ளார்.

நாடு திறந்திருக்கும் போதே, Covid19 தொற்றைக் கட்டுப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுவதன் வேகம் அதிகரித்துள்ளமையால் சகலரும் மிகவும் அவதானமாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts