இலங்கை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள கொட்டாவ இடைமாற்றில் பணிபுரிந்த 15 காசாளர்களுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, கொட்டாவ இடைமாற்றத்தின் ஊடாக அதிவேக நெடுஞ்சாலைக்குள் நுழையும் வாகனங்களுக்கான அனுமதி சீட்டு இன்று (30) வழங்கப்பட மாட்டாது.
இதேவேளை, நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்னவுக்கும் கொவிட் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.