Home இலங்கை பாடசாலை மாணவியின் உயிரை பலி எடுத்த கொரோனா!

பாடசாலை மாணவியின் உயிரை பலி எடுத்த கொரோனா!

0
பாடசாலை மாணவியின் உயிரை பலி எடுத்த கொரோனா!

பாடசாலை மாணவி ஒருவர் கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்று (31) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜி.விஜேசூரிய, சிறுமி கொவிட் நிமோனியா நோயினால் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார்.

லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையில் தினமும் சுமார் 25 கொவிட் தொற்றுக்கு உள்ளான சிறுவர்கள் அனுமதிக்கப்படுவதாக மருத்துவர் மேலும் கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது,

“மஹரகம பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக நேற்றைய தினம் எமக்குத் தெரிவிக்கப்பட்டது. முழுமையான தகவல்கள் இதுவரை எமக்கு கிடைக்கவில்லை.

அவள் ஓரளவு பருமனான சிறுமி என எமக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படுவதில்லை.

அந்த குழந்தைகள் தற்போது பாடசாலைக்கு சென்று வருகின்றனர். நாடு திறந்த நிலையில் உள்ளது.

உங்கள் பிள்ளைக்கு இந்த அறிகுறிகள் ஏதேனும் இருந்தால், மருத்துவரைச் சந்தித்து மருத்துவ ஆலோசனையின் பேரில் மட்டுமே வீட்டில் சிகிச்சை பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here