இலங்கையில் தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 4 ஆம் திகதி அதிகாலை 4.30 மணி முதல் சுதந்திர தின நிகழ்வு நிறைவு பெறும் வரை சுதந்திர சதுக்கம் மற்றும் அதனை அண்மித்த பகுதியில் உள்ள 21 வீதிகள் தற்காலிகமாக மூடப்படவுள்ளன.
சுதந்திர தினத்தை கருத்திற் கொண்டு கொழும்பு நகரில் மாத்திரம் 3000 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுப்படுத்தப்படுவர் என மேல்மாகாண சிரேஷ்ட பிரதிபொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
74 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 4ஆம் திகதி இடம்பெறவுள்ள மரியாதை அணிவகுப்பு நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகையினை முன்னிட்டு கடந்த மாதம் 29 ஆம் திகதி ஆரம்பமானது.
தனியார் துறை ஊழியர்களுக்கும் 5 ஆயிரம் ரூபா!
உயர்தரப் பரீட்சையின்போது மின் துண்டிப்பை ஏற்படுத்த…
ஒத்திகை நடவடிக்கை முதல் நாளை மறுதினம் இடம்பெறும் சுதந்திர சதுக்க வளாகத்தின் வீதிகளில் பொது மக்கள் போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுப்படுவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அணிவகுப்பு மரியாதை நிகழ்ச்சி ஒத்திகையினை கருத்திற் கொண்டு காலை 6 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை சுதந்திர சதுக்க வளாக வீதி முடப்படும்.மாற்று வழி குறித்து ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் 4 ஆம் திகதி சுதந்திர தினத்தன்று காலை 10 மணிமுதல் சுதந்திர தின நிகழ்வு நிறைவடையும் வரை சுதந்திர சதுக்கத்தை அண்மித்த பகுதியில் உள்ள 21 பிரதான வீதிகள் தற்காலிகமாக மூடப்படும்.பொது பயணிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துவது அவசியமாகும்.
சுதந்திர தினத்தன்று கொழும்பு நகரில் சுமார் 3000 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுப்படுவார்கள். சுதந்திர தினத்திற்க கலந்துக் கொள்ளும் விசேட விருந்தினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அழைப்பிதழுடன் அவர்கள் வருகை தரும் வாகனத்தை தரிப்பதற்குமான விசேட முத்திரை வழங்கப்பட்டுள்ளது.
காலை 7.30 மணிக்கு பிறகு விசேட விருந்தினர் வருகை இடம்பெறவுள்ளதுடன், காலை 11.15 மணியளவில் இருந்து மரியாதை அணிவகுப்பு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும்.74ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் காலை 11.20 மணியளவில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.சுதந்திர சதுக்க வளாக வீதி முடக்கப்படுவதால் பொது பயணிகள் எதிர்க்கொள்ளும் அசௌகரியங்களை தவிர்த்துக் கொள்ள முறையான திட்டங்கள் பொலிஸாரால் செயற்படுத்தப்பட்டுள்ளது.பாதுகாப்பு தரப்பினருக்கு பொது மக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.