பிந்திய செய்திகள்

இன்று புத்தளத்தில் இடம்பெற்ற கோர விபத்து!!

புத்தளம் – சிலாபம் பிரதான வீதியில் வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த சொகுசு கார் ஒன்று புத்தளம் மதுரங்குளி 10 ஆம் கட்டைப்பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த போது, நபர் ஒருவர் மீது மோதியதில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபரை அங்கிருந்தவர்கள் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

உயிரிழந்த நபர் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை எனத் தெரிவித்த பொலிஸார், சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

விபத்துடன் தொடர்புடைய காரின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் இன்று புத்தளம் மாவட்ட நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதன்போது சந்தேக நபரான குறித்த காரின் சாரதியை பிணையில் விடுதலை செய்யுமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த விபத்து சம்பவம் தொடர்பில் மதுரங்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts