பிந்திய செய்திகள்

யாழில் மீனவர்கள் வீதி மறியல் போராட் டம் !

யாழ்- பலாலி, வழளாய் மீனவர்கள் இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Gallery

இதனால் பருத்தித்துறை – பொன்னாலை வீதியின் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

Gallery

போராட்டத்தை முன்னெடுத்துள்ள மீனவர்கள் வீதிகளின் குறுக்கே படகுகள் மற்றும் வலைகளை போட்டு தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மருதங்கேணி பிரதேச செயலகம் முன்பாகவுள்ள தாளையடி வீதியை மறித்துள்ள அப்பகுதி மீனவர்களும் உயிரிழந்த மீனவர்களின் உறவுகளும் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Gallery

மருதங்கேணி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அலுவலகத்திற்குள் நுழைய முடியாமல் வெளியில் காத்திருப்பதை அவதானிக்க முடிகிறது. காவல்துறை அதிகாரிகள் வீதியை மறிக்காது போராட்டத்தை மேற்கொள்ளுமாறு போராட்டக்காரர்களிடம் கோரிவருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போது இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக யாழ்ப்பாணம் – பொலிகண்டி மீனவர்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் பொன்னாலை வீதியின் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts