Home இலங்கை பட்டப்பகலில் நடுவீதியில் இடம்பெற்ற கத்திக்குத்து…!

பட்டப்பகலில் நடுவீதியில் இடம்பெற்ற கத்திக்குத்து…!

0
பட்டப்பகலில் நடுவீதியில் இடம்பெற்ற கத்திக்குத்து…!

ஹப்புத்தளை நகரில் நேற்று(1)அப்புத்தளை – பதுளை பிரதான வீதியில் கணவனின் கத்திக்குத்தினால் மனைவி ஆபத்தான நிலையில், தியத்தலாவை அரசினர் மருத்துமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றார்.

மேலும் ஹப்புத்தளை நகர் உணவகமொன்றில் , கடந்த ஐந்து மாத காலமாக பெண் ஒருவர் தொழில் செய்து வந்துள்ளார். அந்நிலையில் கத்தியுடன் வந்த அப்பெண்ணின் கணவன் , தனது மனைவியை சரமாரியாக குத்தினார்.

கடுங்காயங்களுக்குளான மனைவியை, அங்கு கூடியவர்கள் தியத்தலாவை அரசினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் அங்கு தீவிர சிகிச்சைக்குட்பட்ட போதிலும் அவரின் நிலை கவலைக்கிடமான இருந்து வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

கத்தியால் குத்திய நபர் இரத்தம் தோய்ந்த கத்தியுடன் ஹப்புத்தளை பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் இக்கத்திக்குத்துச் சம்பவம் ஏன் இடம்பெற்றதென்பது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here