03.02.2022 இன்று தொடக்கம் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள நெல் களஞ்சியங்களில் நெல் கொள்வனவு செய்யப்படவுள்ளது. மேலும் விவசாய அமைச்சின் நெல் சந்தைப்படுத்தல் சபையானது முல்லைத்தீவு மாவட்ட விவசாயிகளிடம் இருந்து காய்ந்த நெல்லினை தரமான விலைக்கு கொள்வனவு செய்யவுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் உதவி பிராந்திய முகாமையாளர் அறிவித்துள்ளார்.
அந்தவகையில் சிகப்பு நாடு,வெள்ளைநாடு 90 ரூபாவாகவும்,ஏற்றுக்கூலி 2 ரூபாவாக மொத்தம் 92 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்படவுள்ளதுடன், சம்பா நெல்லு 92 ரூபாவாகவும் ஏற்றுக்கூலி 2ரூபாவுடன் 94 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்படவுள்ளது,கீரிச்சம்பா 95ரூபாவாகவும் ஏற்றுக்கூலி 2ரூபாவுடன் 97 ரூபாவிற்கு கொள்வனவு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல் பை ஒன்று 40 ரூபாவாகவும், காய்ந்த நெல்லின் ஈரத்தன்மை 14 வீதத்திற்கு குறைவாகவும், சம்பி 9 வீதத்திற்கு குறைவானதாகவும் இருக்கவேண்டும் என்பதுடன் முள்ளியவளை, தண்ணீரூற்று, குமுழுமுனை,முறிப்பு பகுதிகளில் உள்ள நெல் சந்தைப்படுத்தல் களஞ்சியங்களில் விவசாயிகள் நெல்லினை உரியை முறையில் கொடுக்கலாம் என்றும் நெல் சந்தைப்படுத்தல் சபையின் உதவி பிராந்திய முகாமையாளர் அறிவித்துள்ளார்