இந்த சம்பவம் இன்று (03) பிற்பகல் 12.30 மணியளவில்
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ மேல் பிரிவு தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறித்து கொண்டிருந்த 09 தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
மரத்தில் இருந்த குளவி கூடு கலைந்து வந்து தொழிலாளர்களை தாக்கியதில் 08 பெண் தொழிலாளர்களும் ஒரு உதவி ஆண் வெளிகள உத்தியோகத்தர் உட்பட ஒன்பது பேர் காயமடைந்துள்ளதாக பொகவந்தலாவ வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி வை.எல்.பி. பஸ்நாயக்க தெரிவித்தார்.
காயங்களுக்கு உள்ளான தொழிலாளர்கள் எட்டு பேர் மற்றும் உதவி வெளிக்கள உத்தியோகத்தர் தொடர்பில் அச்சமடைய தேவையில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.