பிந்திய செய்திகள்

சுதந்திர தினத்தில் கடற்படையினருக்கு வழங்கப்பட்ட பதவி உயர்வு

இலங்கையின் 74 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை விமானப் படையை சேர்ந்த 175 அதிகாரிகளுக்கும் மற்றும் 2,338 சிப்பாய்களுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.மேலும்
இந்நிலை உயர்வுகள் தேசிய சுதந்திர தினமான இன்று முதல் அமுலுக்கு வருவதாக விமானப்படை பேச்சாளர் தெரிவித்தார்.

இதேவேளை, தாய் நாட்டுக்காக இராணுவத்தினரால் வழங்கப்பட்டுள்ள அர்ப்பணிப்பு சேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் தேசத்தின் 74 வது தேசிய சுதந்திர தினத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அனுமதியுடன் பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவினால் 480 அதிகாரிகள் மற்றும் 8,034 சிப்பாய்களுக்கான நிலை உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி, 7 சிரேஷ்ட பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரல் நிலைக்கும், 16 கேணல்கள் பிரிகேடியர் நிலைக்கும், 36 லெப்டினன் கேணல்கள் கேணல் நிலைக்கும், 50 மேஜர்கள் லெப்டினன் கேணல் நிலைக்கும் 207 கெப்டன்கள் மேஜர் நிலைக்கும், 94 லெப்டினன்கள் கெப்டன் நிலைக்கும், 70 இராண்டாம் லெப்டினன்கள் லெப்டினன் நிலைக்கும் நிலை உயர்த்தப்பட்டுள்ளனர். இந்நிலை உயர்வுகள் தேசிய சுதந்திர தினமான இன்று வழங்கப்படுகின்றது.

ஜெனரல் சவேந்திர சில்வா 2019 ஓகஸ்ட் 18 ஆம் திகதி இராணுவத் தளபதியாக பதவியேற்றதன் பின்னர் அவர் பதவியேற்ற குறுகிய காலத்திற்குள் இலங்கை இராணுவத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு நான்கு இலக்க நிலை உயர்வுகளை வழங்கியதன் மூலம் மீண்டும் வரலாற்றில் இடம்பிடித்துக் கொண்டார்.

ஸ்ரீலங்காவின் 73 ஆண்டுகால வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 18 ஓகஸ்ட் 2019 க்குப் பிறகு இன்று வரை 4,341 அதிகாரிகள் மற்றும் 86,741 சிப்பாய்களுக்கு நிலை உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts