பிந்திய செய்திகள்

மக்களோ பாதாளத்தில்! ஆனால் ராயபக்சர்களுக்கோ சுதந்திர தினம் புறக்கணித்த எதிர்க்கட்சி

இன்று(4)காலை இலங்கையின் 74 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தலைமையில், சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது

குறித்த நிகழ்வுகளில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி அணியினர் கலந்து கொள்ளவில்லை.

மேலும் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை சீராக இல்லாதபோது ஆடம்பரத்திற்காக செலவிடப்படும் நிதியை ஏற்றுக்கொள்ள முடியாது என ஐக்கிய மக்கள் சக்தி மேலும் தெரிவித்துள்ளது.

இதே வேளை சுதந்திர தினத்தினை கொள்ளுப்பிட்டி பொல்வத்தை சிறி தர்மகீர்த்தியராமயவிற்கு வருகை தந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, விகாரையின் பிரதம தேரர், சிறிலங்கா ராமன்ய மஹாநிகாய பீடாதிபதி அக்கமஹாபண்டித திரிபிடக மகுலேவே சிறி விமலாபிநந்தன தேரரின் வழிகாட்டலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேலும் முன்னாள் காலணித்துவ நாட்டின் விடுதலைக்காக தம்மை அர்ப்பணித்த மகத்தான தேசிய மாவீரர்களின் நினைவாக டி.எஸ்.சேனாநாயக்கவின் உருவச்சிலைக்கு எதிர்க்கட்சித் தலைவர் மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

Gallery
Gallery

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts