இன்று(5)மொனராகலை – வெல்லவாய பகுதியில் உள்ள எல்லேவளை நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக இலங்கை காவல்துறையினர் கூறியுள்ளனர்.
மாத்தறையில் இருந்து குறித்த பகுதிக்கு வருகை தந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினரின் ஆரம்ப கட்ட விசாரணகள் மூலம் தெரியவந்துள்ளது.
குறித்த சம்ப இடத்திற்கு விரைந்த காவற்துறையினர் பிரதேசவாசிகளின் உதவியுடன் குறித்த சடலங்களை மீட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் காவற்துறையினர் மேலதிக விசாரணையினை முன்னெடுத்து வருகின்றனர்.













































