பிந்திய செய்திகள்

கடமையிலிருந்த போக்குவரத்து பொலிஸ் அதிகாரி-இடம்பெற்ற கோடரி தாக்குதல்

இன்று காலை அம்பலாந்தோட்டை நகரின் மையப்பகுதியில் உள்ள மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்பாக போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கோடரி தாக்குதலுக்கு உள்ளாயுள்ளார்.

அம்பலாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு காயமடைந்துள்ளார். இந்நிலையில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அந்த சந்தேக நபர் பொலிஸ் அதிகாரியை கோடரியால் தாக்கிய பின்னர் விஷம் அருந்தியுள்ளார்.

இதனையடுத்து சந்தேகநபரும் அம்பலாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் சந்தேக நபர் மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts